இலங்கை வானொலி முஸ்லிம் சேவையும், மூடநம்பிக்கையும். RASMIN MISc (India)

 

இன்று உலகில் எத்தனையோ நாடுகளில் முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த அத்தனை நாடுகளிலும் பெரும்பான்மையான நாடுகளில் முஸ்லீம்கள் தங்களின் உரிமைகள் பரிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.
 
ஆனாலும் இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கும் அப்படிப்பட்ட நிலைகள் ஏற்பட்டாலும் பல சந்தர்பங்களில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் யாரும் மறுக்க முடியாது.
 
இப்படிப் பட்ட உரிமைகளில் மிக முக்கியமானது தங்கள் மதத்தை பின்பற்றும் உரிமையாகும்.
 
இலங்கை வாழ் முஸ்லீம்கள் தாங்கள் இஸ்லாமியர்கள் என்று கூறி தங்கள் மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் அதன் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இந்நாட்டில் இல்லை என்பதை நன்கறிவர்.
 
அந்த உரிமைகளுக்கு கண்ணியம் வழங்கும் விதமாக இலங்கை அரசால் இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு கொடுக்கப் பட்ட ஒரு முக்கியமான கவுரவமான அன்பளிப்புதான் இலங்கை வானொலி முஸ்லீம் சேவையாகும்.
 
இந்த சேவையில் கடமை புரியும் பெரும்பான்மையானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மூட நம்பிக்கைக்கு துணை நிற்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
ஏன் எனில் வானொலி என்பது மிகப் பெரியதொரு ஆயுதம் அந்த ஆயுதத்தின் மூலம் பெரும் புரட்சியையே உண்டு பண்ண முடியும் என்பது யாம் அனைவரும் அறிந்த ஒன்றே!
 
ஆனால் இந்த முஸ்லீம் சேவை என்ற நம்முடைய அபார சக்தியின் பயன்பாட்டை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
இன்றைய நவீன சவால்களுக்கு மிகத் தொளிவாக பதில் கொடுக்கும் ஒரு மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மாத்திரம் தான் அந்த இஸ்லாம் மார்கம் எதனை மக்களுக்கு சொல்கிறதோ அதனை நாம் அழகாக எடுத்துச் சொல்வதற்குறிய ஒரு மிகப் பெரிய கலமாக இந்த இலங்கை வானொலி முஸ்லீம் சேவை இருக்கிறது.
 
ஆனால் கவலைக்குறிய விஷயம் என்னவெனில் அந்த அழகிய கலத்தில் சிலரின் ஆதிக்கம் உண்மை இஸ்லாத்தை சொல்வதற்கு நமக்கு மிகவும் தடையாக இருக்கிறது.
 
ஏன் எனில் இன்றைய இலங்கை வானொலி முஸ்லீம் சேவையின் பணிப்பாளரில் ஆரம்பித்து அதில் முக்கிய பொருப்புகளில் இருக்கக் கூடியவர்களின் மார்க்க அறிவை நாம் அலசிப் பார்த்தால் அதில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
 
அத்துடன் அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாமிய அகீதாவை (அடிப்படைக் கொள்கையை)எப்படி புரிந்திருக்கிறார்கள் என்று நாம் பார்த்தால் அதிலும் அவர்களின் நிலை படு மோசமானதாக உள்ளது.
 
இஸ்லாத்தில் இல்லாத,இஸ்லாம் காட்டித் தராத நூதனமான (பித்அத்)செயல்பாடுகளை மிகத் தெளிவாக ஆதரிக்கிறார்கள்.
 
அல்லாஹ்வை பயந்து,அவனை வணங்க வேண்டியவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி மிகத் தெளிவாக அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள்.
 
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பரப்புவதற்கு பயண்பட வேண்டிய முஸ்லீம் சேவை இன்றைக்கு கப்ரு வணக்கத்தையும்.கத்தம்.கந்தூரி போன்ற மார்கத்தில் இல்லாத காரியங்களை இஸ்லாம் என்ற போர்வையில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயண்பட்டுக் கொண்டிருப்பது இஸ்லாமிய சமுதாயத்திற்கு இழைக்கப் படும் மிகப் பெரிய மோசடியாகும்.
 
அன்பின் இஸ்லாமிய அன்பர்களே!
 
நமது சமுதாயத்தின் மிகப் பெரும் சொத்தான இந்த முஸ்லீம் சேவை என்ற மீடியாவை நாம் மிகச் சிறப்பாக பயன்படுத்துவதற்கு பாடு பட வேண்டும்.
 
அது போல் இதனை குர் ஆன் ஹதீஸ் மாத்திரம் தான் மார்கத்தின் ஆதாரம் என்று ஏற்றிருக்கும் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
 
இல்லையெனில் மீண்டும் மீண்டும் பித்அத்துக்களை ஆதரித்து மார்கத்திற்கு முரனான தகவல்களை தருகின்றவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கு இது அவர்களுக்கு ஒரு சந்தர்பமாக ஆகிவிடும் என்பதை நாம் நன்றாக மனதில் நிலை நிருத்திக் கொள்ள வேண்டும்.

Check Also

Al- Agil Scholarships

Al- Agil Scholarships 2016 awards Medicine, Engineering and Computer Science.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from Sri lanka Muslims Web Portal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading